Friday, February 3, 2012


நீண்ட நேரம் தொலைபேசியில்
நீயிருந்த போதினிலே
மெய்மறந்து கிறுக்கிவிட்ட
காகிதத்தில் உன் பெயர்தான்.

எப்போதும் அவசரம்
ஏதோ ஒரு பிரச்சனை
நேரம் பஞ்சமாகவில்லை
மற்றவர்கள் வரும்போது.

குடும்பம் என்றால் என்னவென்றும்
மனைவியைப் புரிவது
எப்படியென்றும்
அறிவுரை சொல்கிறாய் நண்பனுக்கு.

மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.

காலம் உனக்காகக்
காத்திருக்காது
கரைந்து கொண்டிருப்பது
நம் வாழ்க்கை.

Friday, January 27, 2012


தென்றலாய் வாழவே ஆசைபடுகிறேன்......
புயலாய் வாழவே வாய்த்திருக்கிறது !!!!!

Saturday, June 18, 2011

திரும்ப தர முடியுமா....














வான் நிலா
வானின் கண்ணீர்
புல்வெளி
பூங்காவனம்
இப்படி அனைத்தயும் ரசித்த
என் மென்மையான மனதை !

கடிகாரத்தையும்
கையில் இருக்கும் செல் போனையும்
மாறி மாறி பார்த்திருந்த
அந்த கணத்தை !

ஈமெயிலில் refresh button தட்டியும்
chat messenger லில் உன் பெயர் பார்த்தும்
காத்திருந்த அந்த நிமிடங்களை !

துக்கமின்றி துள்ளி குதித்தோடிய
என் குழந்தை உள்ளத்தை !

பெற்றோர் என் மேல்
இழந்த நம்பிக்கையை !

உன் உறவுக்காக
நான் தொலைத்த சொந்தங்களை !

உன்னை நினைத்து
உனக்காக வாழ்ந்த
ஒவ்வொரு வினாடியை !

உயர்ந்த இலட்சியங்களுடனும்
பலவித கனவுகளுடனும்
வாழ்ந்து வந்த
தன்னம்பிக்கையை !

இழந்துவிட்ட என் இறந்தகாலத்தை
மறந்துவிட்ட என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்ட என் சுயத்தை

திரும்ப தர முடியுமா உன்னால்?

Friday, April 29, 2011

உன்னைப்பற்றிய நினைவுகள்

நாள் முழுதும் கழிகிறது
உன்னைப்பற்றிய நினைவுகளால்
மட்டும்!!
பனிக்காற்றின் குளிர்ச்சியில்
இளங்காலை வெப்பத்தில்
வானொலியின் காதல் பாடலில்
அவசரச் சமையலில்
மின்னஞ்சல் வாசிக்கையில்
குறுந்தகவல் சத்தத்தில்
மதிய உணவு நேரத்தில்
ப‌ணிமுடித்துக் கிள‌ம்புகையில்
பேருந்து ப‌ய‌ண‌த்தில்
நட்சத்திரங்களை,நிலவை,வானை ரசிக்கையில்
போர்வையின் மென்மையில்
என் க‌ன‌வில்
என
மறக்க நினைத்தும்
முடியாமல்
என் வாழ்வின்
எல்லாக் கணங்களிலும்
உன்னையே யோசித்தபடி இருக்கையில்
உன் நினைவகற்றி வாழ
ஒரு ம‌ணித்துளிக்கூட‌
‌முடிவ‌தில்லையே என்னுயிரே...

பிரிவின் வலி ..


உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது..


பின் இரவு நேரங்களில் அது
பேயாட்டம் ஆடுகிறது..


ஆழ் மனதில் அடுக்கி வைத்திருக்கும்
உன் நினைவுகளை கலைத்து போடுகிறது..


உன் வாசனையை, அறை எங்கும்
நிரப்பி மாயாஜாலம் செய்கிறது..


காதல் வலியால் துடிப்பதை
குரூரமாய் பார்த்து சிரிக்கிறது..


பயந்த குழந்தையாய் போர்த்தி படுக்கையில்,
பக்கத்தில் படுத்து கட்டி கொள்கிறது உன் பிரிவும்.


கண்ணை மூடி தூங்க முனைகையில்,
காதல் கதைகளை உரக்க பேசுகிறது.


சிவந்த விழிகளோடு காலையில் பார்க்கையில்,
சாதுவாய் தூங்கி கொண்டிருக்கிறது அது.


அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என
அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.


உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது...

நேற்று இறந்து விட்டேன்

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...

Wednesday, April 27, 2011

தொலைத்துவிட்டுத் தவிக்கிறேன்...!!

மெளனமாய் இருக்கிறேன்
நான்.
நான்...
பேசியபோது
நீ...
மெளனமாய் இருந்ததால்...
நிறையவே பேசுகிறாய்
இப்போது-எல்லாம்
நீ....
தொலைத்துவிட்டுத்
தவிக்கிறேன்
உன்னை..
தவறுதான்....
என்...
தவிப்புக்களும்
ஏக்கங்களும்
என்...
வார்த்தைகளுக்குள்
குழம்பித் தவிப்பதை
கவனித்து இருக்கிறாயா.
நீ...
எனக்குள்
பறந்து
கொண்டிருக்கிறாய்
உயிரோடு உரசியபடி....
பூட்டவும்
முடியவில்லை.
விட்டு விடவும்
முடியவில்லை.
என்ன
செய்ய நான்....
யாராவது
நினைத்தல் என்பது
தும்மல் என்றால்
நொடிக்கொருதரம்
தும்மிக்கொண்டேயிருப்பாய்.
எனக்கும்
தும்மல் வரும்
எப்போதாவது
நினைக்கிறாயா
என்னை
நீ...
குளிர்ந்து இறுகிக்
கிடக்கிறாய்
பனிக்கட்டியாய்
மனதுக்குள்.....
வலிக்கிறது.
தடுக்கி விழுந்து
எழும்புகிறேன்.
வெளியில் தெரியாத
உள்
காயங்களோடு !!!