Someday you will know… how it hurts… how it’s being like ME… that you left… alone… to face the world that hates you… struggle alone… Someday you will know…
Sunday, March 20, 2011
நிகழ்காலத்தை அடகுவைத்து
உன்னுடனான
கடந்தகாலத்தை மீட்டுக்கொண்டிருக்கிறேன்
நினைவுகளில்!!
திடிரென்று கேட்டதால்
குழம்பிவிட்டேன்
நில்
பார்த்துவிட்டுச் சொல்கிறேன்
என் பெயரை!!
உனைப் பார்த்ததும்
கண்ணில் தெரியும் காதல்
நீ பார்த்ததும்
ஓடி ஒழிந்து கொள்கிறது
மனதில்!!
உன்
கண்ணீர் துளிகள் விழுந்ததில்
சிதறியது
மனது!!
திருவிழாவில்
தொலைந்த குழந்தையாக
தேடி அலைகிறேன்
உன்னை
கடந்துவந்த பாதையில்!!
புதிதாய் வாங்கும்
பேனாக்கள்,
உன் பெயரை எழுதவே
கற்றுக்கொள்கின்றன
முதலில்
நான்
மறந்துவிட்டபோதிலும்
நிராகரிப்புக்கு பயந்து
தற்கொலை செய்துகொண்டது
அதனால் தான் என்னவோ
உனை சுற்றியே
அலைந்து கொண்டிருக்கிறது
காதல்
ஏனென்று கேட்காமல்
உயில் எழுதிவை
நான் கொண்டுவரும் தாளில்தான்
சிதை மூட்டவேண்டுமென்று
கொண்டுவருகிறேன்
உனக்கான கவிதைகளை
மரணவலியினும் கொடுமை
கடைசி வரை இருப்பாயா என்றாய்
இதோ நான் மட்டுமே இருக்கிறேன்
உன்னை தேடிக்கொண்டு..
உன் மொழிகளில் எதை மறக்க
என எனக்கு தெரியவில்லை.
நீ பேசிய வார்த்தைகளெல்லாம்
வேதவாக்காய் தேவனின் மொழியாய்
என் இதயத்தில் வைத்து இன்னும் பூஜிக்க
உனக்கு மட்டும் என்னிடம் எப்படி சலிப்பு வந்தது.
எந்த உறவும் உன்னை கடந்து
என் நினைவை தொட அனுமதிக்காமல் நான்.
அதிகபட்ச எதிர்ப்பார்பு
உன் அன்பான வார்த்தைகள் மட்டுமே
என்னை அழவைக்காதது நீ மட்டுமே
என பெருமிதமாய் கழிந்த நாட்கள் போய்
அழாத நாட்கள் இல்லை என்ற நிலை.
சின்ன சின்ன சந்தோஷங்களில்
என் கண்ணாடி கனவு மாளிகை.
பல நேரம் நீ சொல்வது பொய்
என அறியும் போது உடைந்து
சிதிலமாகும் இதயம் இருப்பினும் இணைத்திடுவேன் அதனுள்ளே நீ
வாழ்வதால்..எவர் வந்தார் குறுக்கே? எது தடுக்கிறது உன்னை..?ஏன் மாறினாய் இப்படி? அன்று நீயாக தந்த அன்பும் அக்கறையும் இன்று நானாய் கேட்டு வாங்குவது